கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு தாமதம்

Government Employee Eastern Province Money Education
By Rakshana MA Aug 10, 2025 08:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் மிகவும் கவலை அளிக்கிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்படுகையில், கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக மே மாதம் வழங்கப்பட்டதாகவும், ஜூன், ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கபடவில்லை எனவும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

கிழக்கு முஸ்லிம் அரசியலில் ‘மறைமுக அடிமைத்தனம்’ – மிப்லால் கண்டனம்

மாதாந்த கொடுப்பனவு

இது இந்த ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அத்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள் தான்.

கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவு தாமதம் | Allowance Delay For Pre School Teachers

இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் இந்த அரசாங்கம் பொடு போக்காக உள்ளது? கொடுப்பனவுக்கான நிதி இதுவரை விடுவிக்கப் படாததாலேயே கொடுப்பனவு தாமதம் நிலவுவதாக கூறப் படுகின்றது.

கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப் பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது. எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு

திருக்கோவிலில் கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்பு

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கும் சவூதி அரேபியா..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW