குறைந்தபட்ச கையிருப்பினை பராமரிக்கத் தவறியுள்ளதாக :கஞ்சன விஜேசேகர குற்றச்சாட்டு

Ceylon Petroleum Corporation Twitter Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Madheeha_Naz Jun 08, 2023 10:45 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

255 சிபெட்கோ விற்பனை முகவர்கள் கடந்த வாரம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் குறைந்தபட்ச கையிருப்பினை பராமரிக்கத் தவறியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனை இன்று (08.06.2023) அமைச்சர்  தமது டுவிட்டர் பதிவொன்றில் பதிவிட்டுள்ளார்.


ஒப்பந்தங்களில் நிபந்தனைகளை மீறிய விற்பனை முகவர்களுக்கு எதிராக மதிப்பாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.