சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி

Colombo Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 13, 2024 12:18 PM GMT
Laksi

Laksi

இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே ஆதரவு என்று முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம்.பைசால் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்றைய காலகட்டத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம், பேர்கர் என அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் எமது நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ரணிலுக்கே ஆதரவு

ஏனெனில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை நெருக்கடியில் இருந்து வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளார்.

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி | All Muslim Organizations Support President Ranil

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற கனவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணுகின்றார்.

களவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

களவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

முஸ்லிம் அமைப்பு

கொழும்பு பிரதேசத்தில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் பேர்கர் மக்களைப் போன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களும் வாழ வேண்டும் என்பதே அவரின் எண்ணமாகும்.

சகல முஸ்லிம் அமைப்புகளும் ரணிலுக்கே ஆதரவு: முஸ்லிம் இடதுசாரி முன்னணி | All Muslim Organizations Support President Ranil

தற்போது அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றன என்றே கூற வேண்டும்." - என்றார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW