அதிகரிக்கும் நிதி மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்க நிறுவனங்களின் பேரில் நிதி மோசடி முயற்சிகள் அதிகரிப்பது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் (SLCERT) சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுபொல (Charuka Damunupola) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இவ்வகையான மோசடிகள் அரசாங்க நிறுவனங்களின் முத்திரையைக் கொண்ட மின்னஞ்சல்கள் மூலம் இடம்பெறுவதாகவும் பெறுநர்களை கட்டாயமாக பணம் செலுத்தும்படி இவை அறிவுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள்
இந்தநிலையில், சமீப காலமாக இந்த மோசடி நடவடிக்கைகள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சமூக வலைதளங்கள் தொடர்பான 7,900 புகார்களும் நிதி மோசடி தொடர்பான 1,830 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |