வலய மட்ட தமிழ் தினப் போட்டியில் சாதித்த ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயம்

Ampara Eastern Province
By Rukshy Jun 30, 2024 11:44 AM GMT
Rukshy

Rukshy

அக்கரைப்பற்று வலய மட்ட தமிழ் தினப் போட்டியில் ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயத்தில் இருந்து இசை, நடனம், கும்மி கோலாட்டம் நிகழ்சியில் பங்கு பற்றிய 09 மாணவர்கள் வலய மட்டத்தில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

குறித்த நிகழ்வானது இன்று (30.06.2024) அக்கரைப்பற்று அல் - முனவ்வறா கனிஷ்ட வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

வெற்றிப் பதக்கங்கள்

இதில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பொத்துவில் ஆகிய கல்விக் கோட்டங்களிலுள்ள பாடசாலைகள் பங்குபற்றின.

வலய மட்ட தமிழ் தினப் போட்டியில் சாதித்த ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயம் | Al Medina Vidyalayam Tamil Day Competition

ஒலுவில் அல் - மதீனா வித்தியாலயத்தில் இருந்து இசை நடனம், கும்மி கோலாட்டம் நிகழ்சியில் பங்கு பற்றிய ஏ.ஆகிபா ஷஹ்லா, எம்.எஸ்.ஆயிஷா, எம்.எஸ்.ஷாரா அதீமா, ரி.ருஸ்னத் நப்லா, ஜே.அதிகா, ஏ.எம்.ரின்சா, ஏ. பி.சைனப் மிஸ்பா, எம்.ரி.அக்ஸா, எப்.ஹப்ஸா மர்யம் ஆகிய மாணவர்களே வலய மட்டத்தில் வெற்றிப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW