நாட்டின் இன்றைய தினம் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Air Pollution
By Rakshana MA Apr 29, 2025 11:06 AM GMT

நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அத்துடன், வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குக் காற்றின் தரச் சுட்டெண் 38 - 72க்கும் இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

காற்றின் தரம்

ஆரோக்கியமான நிலையில் அத்துடன் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் இன்றைய தினம் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல் | Air Quality In Sri Lanka Today

மேலும், குருநாகல், கண்டி, கேகாலை, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, புத்தளம், பதுளை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிகமாகப் போக்குவரத்து நெரிசல் உள்ள வேளைகளில், குறிப்பாகக் காலை 7.30 முதல் 8.30 வரை மற்றும் பகல் வேளையில் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு (AQI) குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!

வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


Gallery