புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்பு

Sri Lanka
By Mayuri Aug 21, 2024 03:05 AM GMT
Mayuri

Mayuri

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன.

சிலாபம் மற்றும் பங்கதெனியவுக்கு இடையில் மரமொன்று தண்டவாளத்தில் விழுந்துள்ளது.

தொடருந்து சேவை தடை

இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்பு | Affected Train Services On Puttalam Route

இதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதன் காரணமாக மரங்கள் முறிந்து விழும் சாத்தியம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW