குடிசன மதிப்பீடு குறித்து அறிவுரை!

Sri Lanka Government Of Sri Lanka Citizenship
By Rakshana MA Nov 19, 2024 08:12 AM GMT
Rakshana MA

Rakshana MA

குடிசன மதிப்பீடு செய்யவரும் அதிகாரிகள் மக்களின் கருத்திற்கு செவி சாய்க்காமல் அதிகாரிகள், தாங்களாகவே பதிவுகள் செய்வதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என மலையக மக்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டளர் வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.

விசேடமாக இன அடையாளம் தொடர்பில் இம்முறை புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள (இந்தியத் தமிழர் / மலையாகத் தமிழர்) என்ற அடையாளத்தை பதிவதை தவிர்த்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பாக குடிசன மற்றும் புள்ளி விபரதிணைக்கள பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டுவரக் கூடியதாக இருந்தது.

அநுரவின் அதிரடி திட்டம் : நாடாளுமன்றத்தில் எதிர்பாராத தடைகள்!

அநுரவின் அதிரடி திட்டம் : நாடாளுமன்றத்தில் எதிர்பாராத தடைகள்!

குடிசனப்பதிவில் ஏற்படும் தவறுகள்

இதற்கு அவர், நாங்கள் எவ்வளவு பயிற்சிகள் வழங்கினாலும் இவ்வாறான சில தவறுகள் இடம்பெறலாம் என்று ஏற்றுக் கொண்டார்.

மேலும், அது தொடர்பில் அவர் உடனடியாக கவனத்திற்கு எடுத்து குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுற்குற்பட்ட ஆய்வுக்கு பொறுப்பானவர்களோடு தொடர்பை ஏற்படுத்தி அத்தவறு தொடராவண்ணம் தேவையான அறிவுரை வழங்கி உள்ளார்.

குடிசன மதிப்பீடு குறித்து அறிவுரை! | Advice On Citizen Assessment Process In Sri Lanka

இவ்வாறான தவறுகள் இன்னும் பல இடங்களில் இடம்பெறலாம் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் அது தொடர்பாக அவரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குடிசனம் தொடர்பாக முறைப்பாடுகள்

எனவே இக்காலப் பகுதியில் உங்கள் இல்லத்திற்கு அல்லது நீங்கள் வாடகைக்கு இருக்கும் இல்லத்திற்கு வரும் அதிகாரிகள் இவ்வாறான விதத்தில் தகவல்களை உங்கள் கருத்தினை செவிமடுக்காமல் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றால் போல் புள்ளிவிபர படிவத்தில் பதிந்தால்,

குடிசன மதிப்பீடு குறித்து அறிவுரை! | Advice On Citizen Assessment Process In Sri Lanka

உடனடியாக உங்கள் இல்லத்தின் வாயில் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் சிவப்பு நிற ஸ்டிக்கரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து இலக்க குறியீட்டை குறிப்பிட்டு அல்லது அந்த ஸ்டிக்கரை புகைப்படம் எடுத்து உங்கள் பிரதேச செயலர் பிரிவு, கிராம அலுவலர் பிரிவை குறிப்பிட்டு 0719929029 / 0777034136/ 0779915459/ +94 71 649 5068 வாட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். 

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு ஜெய்சங்கர் வாழ்த்து

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அநுர

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW