வைத்தியசாலையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

Anuradhapura Sri Lanka Hospitals in Sri Lanka
By Shalini Balachandran Jul 15, 2024 03:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் 11 பேர் சுகயீனமடைந்து ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை வைத்தியசாலையினால் மாணவர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மிஹிந்தலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஆறு வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலதிக சிகிச்சை

அத்தோடு, குறித்த மாணவர்கள் மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சளிக்காக சிகிச்சை பெறச் சென்ற போது ​​ அங்கு வழங்கப்பட்ட ஊசி மருந்து காரணமாக சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்றப்பட்ட ஊசி மருந்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் | Admission Of Students Hospital Pre Filled Syringes

மேலும், இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW