அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடு
தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள், கடந்த அரசாங்கங்களின் சில தீர்மானங்கள் போன்ற காரணிகளினால் அரச சேவையில் ஒவ்வொரு தரத்திற்கும் இடையில் கடுமையான சம்பள முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, 1992ஆம் ஆண்டு முதலே சில சேவைகளில் சம்பள முரண்பாடு நிலவி வருவதாக சந்தன அபேரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அரச ஊழியர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பள முரண்பாடு களைவது சவால் மிக்கது என அமைச்சர் சந்தன அபேரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |