பாதையிலிருந்து விலகி பாடசாலைக்குள் நுழைந்த கனரக வாகனம்
Batticaloa
Eastern Province
Accident
School Incident
By Rakshana MA
காத்தான்குடி பிரதான வீதியில் இன்றைய தினம் (07) விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது வீதியால் சென்று கொண்டிருந்த கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலைக்கு முன் பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனமானது, அருகில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த காரணத்தினால் இவ்வாறு பாதையிலிருந்து விலகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |