முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அபூ உபைதா ராசிக் பரீட் காலமானார்

Trincomalee Sri Lankan Peoples Death
By Sajithra May 22, 2026 07:27 AM GMT

மூதூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சகோதரர் அபூ உபைதா ராசிக் பரீட் நேற்று (21.05.2026) மாலை காலமானார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருந்தார்.

பின்னர், அவர் தனது மாகாண சபை உறுப்பினர் பதவி விலகி, நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

தலைவர் ரவூப் ஹக்கீமின் பதவி விலகலால் ஏற்பட்ட மாகாண சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு, கட்சியின் மூத்த உறுப்பினரான சகோதரர் ராசிக் பரீட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு மக்கள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் சுகவீன முற்றிருந்த இவர், சிகிச்சை பெற்று வந்து நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.