அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் அப்துல்லா மஹ்ரூப்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் சகல உறுப்புரிமையில் இருந்தும் தான் விலகி கொள்வதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் காங்கிரஸில் கடந்த பத்து வருடங்களாக பயணித்துள்ளேன். ஒன்பது வருட காலமாக தேசிய அமைப்பாளராக இருந்து 2015இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 34 ஆயிரம் வாக்குகளை பெற்று முதலிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன் பிரதியமைச்சர் பதவியையும் கிடைத்தது.
மக்கள் பணிக்காக இதனை அர்ப்பணம் செய்து பணியாற்றினேன். இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மூதூரில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவரை நிறுத்தி திட்டமிட்டு தோற்கடிப்பதற்காக சஜித்தும் ஹக்கீமும் எனக்கு எதிராக செயற்பட்டார்கள்.
இதனை ரிசாட்டுக்கு எடுத்து கூறியிருந்தேன். இருந்த போதிலும் இரு வருடங்களாக திட்டமிட்டு என்னை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக வைத்தியர் ஹில்மிக்கு வேட்பாளரை தருவதாக கூறி சதியை நடத்தி விட்டு சென்றுள்ளார்.
இவ்வளவு காலமாக இப்படியொரு பிரதான சூத்திரதாரி இருப்பார் என்று நினைக்கவில்லை. தற்போது அறிந்து கொண்டேன். எதிர்வரும் 11ஆம் திகதி வேட்பு மனு தாக்கலின் போது பொதுத் தேர்தலில் களமிறங்குவேன் என்பதை தெரிவிக்கிறேன் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |