ஓய்வூதிய நிலுவை தொகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Sri Lankan Peoples
Money
Department of Pensions
Pensioner Associations
By Rakshana MA
ஓய்வூதிய நிலுவைத் தொகைகளில் சுமார் 90% தற்போது செலுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 10% இந்த மாதத்துக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த மாதம் ஓய்வூதியத்துடன் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
ஓய்வூதிய நிலுவை
கடந்த பாதீட்டில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து ஓய்வூதிய நிலுவைத் தொகைகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், தகுதியுள்ள பல ஓய்வூதியதாரர்கள் ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் தங்கள் கொடுப்பனவுகளைப் பெற்றதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |