பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (08.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தல் காலத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 3200 காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல் கடமை
இதேவேளை, குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளுக்காக அவ்விடங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.
அதன்படி, அந்த இடங்களின் பாதுகாப்புக்கு இராணுவ வீரர்களை ஈடுபடுத்த வேண்டியிருக்கும்.
கலகத் தடுப்புக் குழுக்கள்
வாக்களிப்பு நிறைவடைந்ததன் பின்னர் நாடளாவிய ரீதியில் 269 வீதித்தடைகளும் 3,109 நடமாடும் சுற்றுப்பயணங்களும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், 214 கலகத் தடுப்புக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாசகார நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |