பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை: சுகாதார அமைச்சு
Ministry of Health Sri Lanka
Dr. Asela Gunawardana
Hospitals in Sri Lanka
National Health Service
By Fathima
இந்த வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள் நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.