வாழைச்சேனையில் முதியவர் அடித்து கொலை
வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் கணபதிப்பிள்ளை தாமோதரம் (வயது 63) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம்
மேலும், குறித்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அயலில் வசித்து வந்த மாவடிவேம்பை சேர்ந்தவர்கள் தற்போது தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வாழைச்சேனை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சம்பத் தலைமையிலான வை.தினேஷ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |