துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 6.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேற்கு துருக்கியில் 11 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாரிய நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
பலிகேசிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |