24 மணித்தியாலயத்திற்குள் 54 தேர்தல் அத்துமீறல்கள் பதிவு
கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் 54 தேர்தல் அத்துமீறல்களும், ஒரு மாத காலத்திற்குள் 716 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (26) தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
நேற்று (25) காலை தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரையிலும் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 10 சட்ட மீறல்கள் முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 43 சட்ட மீறல்கள் மற்றும் 01 வன்முறைச் சம்பவமும் பதிவாகியுள்ளன.
இதனடிப்படையில் கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரையிலும் 716 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 225 சட்ட மீறல்களும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 470 சட்டமீறல்கள் மற்றும் வேறுபட்ட குற்ற நடவடிக்கை 15ம் பதிவாகியுள்ளன.
மேலும் இதுவரையில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகள் 716 ஆகவும் அதில் 580 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன், 136 முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |