5 மாவட்டங்களின் பல பகுதிகள் டெங்கு அபாயமிக்க வலயங்களாக அடையாளம்

Colombo Gampaha Dengue Prevalence in Sri Lanka
By Mayuri Sep 01, 2024 06:32 AM GMT
Mayuri

Mayuri

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயமிக்க வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள்

நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,552 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

5 மாவட்டங்களின் பல பகுதிகள் டெங்கு அபாயமிக்க வலயங்களாக அடையாளம் | 5 Districts Declared As Dengue Risk Zones

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,120 ஆகும்.

இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW