அநுரவின் வெளிநாட்டு விஜயத்தை தொடர்ந்து 4 பதில் அமைச்சர்கள் நியமனம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Government
By Rukshy Feb 10, 2025 10:12 AM GMT
Rukshy

Rukshy

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை! வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

ஜனாதிபதியுடன் சுற்றுப்பயணம்

இந்த அமைச்சு, ஜனாதிபதியுடன் சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ளது.

அநுரவின் வெளிநாட்டு விஜயத்தை தொடர்ந்து 4 பதில் அமைச்சர்கள் நியமனம் | 4 Acting Ministers Appointed

அவ்வாறு நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் விவரங்கள் பின்வருமாறு. டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பதில் அமைச்சர் – டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

பதில் பாதுகாப்பு அமைச்சர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சர் – தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் – வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசா விதிகளை மாற்றியுள்ள சவூதி அரேபியா

விசா விதிகளை மாற்றியுள்ள சவூதி அரேபியா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW