மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : உக்ரைன் அதிகாரியின் அறிவிப்பு!

Russo-Ukrainian War Ukraine Ukrainian Refugee World War II Russia
By Rakshana MA Nov 23, 2024 01:15 PM GMT
Rakshana MA

Rakshana MA

மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட்டதாக உக்ரைனின் (Ukraine) முன்னாள் இராணுவத் தளபதி வலேரி ஜலுஸ்னி (Valery Zaluzhny) தெரிவித்துள்ளார்.

ரஷ்ய- உக்ரைன் மோதலில் ரஷ்ய சார்பு நாடுகளின்; நேரடி ஈடுபாடு அதனையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் தாம் அதனை உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறப்பு!

கிழக்கில் சுயதொழில் அபிவிருத்தி நிலையம் திறப்பு!

ரஷ்யாவின் எதேச்சதிகாரம்

ஐக்கிய இராச்சியத்திற்கான உக்ரைனின் தூதராக தற்போது பணியாற்றும் ஜலுஸ்னி, போரின் உலகளாவிய விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக, ரஷ்யாவின் எதேச்சதிகார கூட்டு நாடுகளின் நேரடி ஈடுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வடகொரியாவின் படையினர் மற்றும் ஈரானிய படையினர் உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் ஆரம்பம் : உக்ரைன் அதிகாரியின் அறிவிப்பு! | 3Rd World War Start 2024 Ukrain Miltary Statements

தொடர்ந்தும் தெரிவித்த அவர், மொஸ்கோ 10,000 வட கொரிய துருப்புக்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியதாகவும், உக்ரைனுக்கு எதிராக போரில், ஈரானிய ட்ரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

இந்தநிலையில், உக்ரைன் இந்த போரில் தனியாக வெற்றி பெற முடியுமா என்பதில் தெளிவில்லை என்றும் ஜலுஸ்னி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க

நாடாளுமன்றத்திற்கான நன்மதிப்பு மீண்டும் உருவாக்கப்படும் : அநுர குமார திசாநாயக்க

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

சிஐடி முன்னிலையில் பிள்ளையானின் 7 மணிநேர வாக்குமூலம் : வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW