நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு பொது மன்னிப்பு
நாட்டிலுள்ள 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாளை (12) கைதிகள் தினத்தை முன்னிட்டு இந்த விசேட மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகளுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட நாளை (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |