திடீர் சுற்றிவளைப்பில் காத்தான்குடியில் 30 பேர் கைது!
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி, தாழங்குடா, புதுக்குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி, கிரான்குளம் உட்பட பல இடங்களில் குறித்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள், கசிப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன சுற்றிவளைக்கப்பட்டது.
திடீர் சுற்றிவளைப்பு
மறைத்து வைக்கப்பட்ட மற்றும், விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுமார் 150 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் , கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |