சட்டவிரோதமாக தமிழகம் சென்ற 3 இலங்கையர்கள் கைது

Arrest
By Pavi Oct 23, 2026 09:12 AM GMT

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி கடற்கரை வழியாகச் சட்டவிரோதப் படகில் தமிழகத்துக்குள் பிரவேசித்த மூன்று இலங்கையர்களை, ராமேஸ்வரம் கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையர்களைச் சட்டவிரோதமாகப் படகு மூலம் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்காக 1.10 இலட்சம் இந்திய ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குறித்த மூவரும், டெல்லிக்குச் சென்று அங்கு போலி கடவுச்சீட்டுகளைப் பெற்று லண்டன் செல்லத் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக தமிழகம் சென்ற 3 இலங்கையர்கள் கைது | 3 Sri Lankans Arrest Entering Tamil Nadu Illegally