3 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை அங்கத்துவப்படுத்தியிருந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தி சார்பில் அநுராதபுர மாவட்டத்தில் போட்டியிட்ட இஸாக் ரஹூமான், முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட அலிசப்ரி ரஹீம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.எம்.எம்.முசாரப் ஆகியோரே ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கட்சியின் தீர்மானங்களுக்கு விரோதமாகச் செயற்பட்டமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |