யாழில் தவறான முடிவு எடுத்து இளம் யுவதி ஒருவர் உயிரிழப்பு

Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Harrish Sep 16, 2024 01:23 AM GMT

யாழ்ப்பாணத்தில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(15.09.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கலைச்செல்வன் யதுசாயினி ஜோதியே உயிர்மாய்த்துள்ளார்.

ஞானக்காவின் ஆசீர்வாதத்திற்கு பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ள அரசியல்வாதிகள்

ஞானக்காவின் ஆசீர்வாதத்திற்கு பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ள அரசியல்வாதிகள்


சடலம் மீதான விசாரணை

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் குறித்த யுவதி நேற்று(15) மதியம் தனியாக வீட்டில் இருந்த போதே தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இதையடுத்து, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

யாழில் தவறான முடிவு எடுத்து இளம் யுவதி ஒருவர் உயிரிழப்பு | 22Year Old Young Woman Suicide In Jaffna

அத்துடன், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு