நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

Trincomalee Hospitals in Sri Lanka Sri Lankan Schools
By Rukshy Jul 20, 2026 12:16 PM GMT

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகை விதையை உட்கொண்ட பிறகு, இந்த மாணவர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 06 இல் கல்வி கற்ற

ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் | 22 Students Hospitalised In Kantale

கந்தளாய் பேராறு பகுதியில் தரம் 06 இல் கல்வி கற்ற 20 மாணவர்களும் 02 மாணவிகளுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.