மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தமிழரசுக் கட்சி!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 3 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தி கட்சி 55,498 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.
அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 40,139 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.
இதேவேளை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 31,286 வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 449,686 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 302,382 ஆகும் எனினும் செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 287,053 ஆகவும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 15,329 ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 79,460 வாக்குளையும் 02 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 67,692 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
கல்குடா தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 22,734 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 14227 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 12,250 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சி 11981 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7,350 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,146 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 34,266 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 31,760 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 10,376 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 5,368 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பட்டிருப்பு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 34739 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 7277 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5314 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3959 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 2061 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 3,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1,383 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,019 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |