கேர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்
Kurunegala
Sri Lanka Police Investigation
Accident
By Dharu
குருநாகல் - குளியாப்பிட்டிய, பல்லப்பிட்டிய விலபொல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று காலை பதிவாகியுள்ளது.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வானும், மணல் ஏற்றிச் சென்ற லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது.
கொடூரமான விபத்து
இந்த கொடூரமான விபத்தில் காயமடைந்த 12 மாணவர்கள் குளியாப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.