மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது

Sri Lankan Peoples Eastern Province Crime Local government election Sri Lanka 2025
By Rakshana MA May 06, 2025 12:10 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஏறாவூர், வாழைச்சேனை பிரதேசங்களில் ஜக்கிய மக்கள் சக்தி, ஜக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இன்று (06) கைது செய்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தல்

கைது நடவடிக்கை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டடமாவடி அந்நூர் பாடசாலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் ஒரு கட்சியின் வேட்பாளர் அரவது ஆதரவாளர் உட்பட இருவர், வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்ததையடுத்து வேட்பாளர் மற்றும் ஆதரவாளரை பொலிஸார் கைது செய்தனர்.

மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட மூவர் கைது | 2 Candidates And Who One Disrupted Election

அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர், தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!

அம்பாறையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் விபரீத செயல்!

மட்டக்களப்பில் 3க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு

மட்டக்களப்பில் 3க்கும் மேற்பட்ட தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW