ரணிலின் வெற்றிக்காக 150 அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக இலங்கை முழுவதும் அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஏறக்குறைய 150 அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், 100 முக்கிய கூட்டங்களாக இருக்கும் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மீதமுள்ளவை ஆதரவு குழுக்களால் நடத்தப்படும் எனவும் தெரியவந்துள்ளது.
அரசியல் கூட்டங்கள்
அத்தோடு, இந்தக் கூட்டங்களுக்கு ஹரீன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, வஜிர அபேவர்தன, ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார மற்றும் பலர் பிரதான பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |