கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு: வெளியான அறிவிப்பு

Colombo Water Cut
By Mayuri Feb 09, 2024 06:07 AM GMT
Mayuri

Mayuri

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 5 மணி முதல் நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது

நீர்வெட்டு நடைமுறையாகும் இடங்கள்

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நீர்வெட்டு தொடர்பான இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.