யாழில் விசேட சுற்றிவளைப்பு: 13 பேர் கைது

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 23, 2024 10:09 AM GMT

யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து நடாத்திய  சுற்றிவளைப்பில் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திறந்த பிடியாணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர்கள் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் விசேட சுற்றிவளைப்பு: 13 பேர் கைது | 13 People Arrested Roundup Special Action Jaffna

மேலும், கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இதனையடுத்து அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலி்ஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW