நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Crime General Election 2024
By Laksi Nov 01, 2024 09:21 AM GMT

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1259 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு ,கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 123 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் 02 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 342 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 873 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : பிரதமரை கடுமையாக சாடும் சாகல

அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் : பிரதமரை கடுமையாக சாடும் சாகல

முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 13 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு | 1259 Election Related Complaints Filed

மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 1018 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 241 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருட்களின் விலை

இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் எரிபொருட்களின் விலை

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டரிசிக்கான கட்டுப்பாட்டு விலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW