தேர்தல் விதிமுறைகளை மீறிய 11 வேட்பாளர்கள் கைது
பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 11 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேகநபர்களை விடுவிப்பதற்காகப் பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
அத்தோடு, தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்களின் 353 ஆதரவாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் வேட்பாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 2,088 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |