இலங்கையில் நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்!
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 புற்றுநோயாளிகள் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புற்றுநோய்
பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
புற்றுநோய் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உள்ளது.
புதிதாக பதிவாகும் புற்றுநோயாளிகளில் சுமார் 19,500 பேர் பெண்களும், 16,400 பேர் ஆண்களும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.