உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி! கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போர் விவகாரத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்துக்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போர் விவகாரம்
தொடர்ந்து அவர் கூறியதாவது,''உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போர் விவகாரத்தில் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத நிலைக்கு செல்கிறது.
மேலும், தேர்தலை காலம் தாழ்த்தவே போரை நீட்டிப்பதாகவும் டிரம்ப் விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி, “உக்ரைனில் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும்,” என தெரிவித்துள்ளார்.