20 வருடங்களின் பின்னர் இலங்கை விஜயம் செய்யவுள்ள மத்திய வங்கியின் தலைவர்
உலக வங்கி குழுமத் தலைவர் அஜய் பங்கா(Ajay Banga) இன்று (07) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
குறித்த விஜயமானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்க வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த இலங்கைக்கான விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பல மூத்த அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை விஜயம்
மேலும், இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்துவது, தனியார் பிரிவின் எதிர்காலம் போன்ற விடயங்கள் தொடர்பில் உலக வங்கியின் தலைவருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
அதேவேளை, சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வங்கித் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |