யாழில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் - நேர்ந்த விபரீதம்

By Fathima Apr 19, 2024 04:29 AM GMT

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் - நேர்ந்த விபரீதம் | Women Died After Falling Into Well In Jaffna

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.