3 வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Accident Death
By Fathima May 30, 2024 03:08 AM GMT
Fathima

Fathima

குவைத்தில் (Kuwait) ஏறக்குறைய 03 வருடங்களாக பணி புரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்துடன் மோதி விபத்து

விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,  ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

[ZY7A1

பேருந்து முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம் | Women Death In Road Accident In Pasara

இதன்போது பலத்த காயமடைந்திருந்த நாடு திரும்பிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.