புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு
புத்தளம் - மன்னார் வீதியின் 4 ஆம் கட்டை பகுதியில் வசித்து வந்த இளம் தாயொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாபு துஷ்யந்தினி (வயது 28) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மின்சார தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளம் தாய் நேற்றிரவு இரவுச் சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, அவரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்த இளம் தாயின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |