கல்வி அமைச்சர் ஹரிணிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த விமல்!

Ministry of Education Wimal Weerawansa Harini Amarasuriya Protest
By Fathima Jan 12, 2026 06:41 AM GMT
Fathima

Fathima

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினர், கல்வி அமைச்சிற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

பதவி விலக வேண்டும் 

இந்த போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளதுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த தொடர் சத்தியாக்கிரக போராட்டம், தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 



GalleryGalleryGalleryGalleryGalleryGallery