மட்டக்களப்பில் பாடசாலைகளின் சுற்று வேலிகளை துவம்சம் செய்த காட்டுயானைகள்

Batticaloa Elephant Eastern Province Sri Lankan Schools
By Laksi Jan 06, 2025 07:00 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு (Batticaloa) - வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஆகியவற்றின் சுற்று வேலிகளை காட்டுயானைகள் துவம்சம் செய்துவிட்டு சென்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டிருப்பு- தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டக் கிராமத்தினுள் நேற்று (05.01.2025) இரவு உட்புகுந்த மூன்று காட்டுயானைகள் குறித்த பாடசாலை வேலிகளை தாக்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேசத்தில் மிக நீண்ட காலமாகவிருந்து இவ்வாறு காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

திறைசேரி உண்டியல்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

காட்டுயானைகளின் அட்டகாசம்

இதனால் அப்பகுதியிலுள்ள, வெல்லாவெளி, வேத்துசேனை, காக்காச்சிவட்டை, விவேகானந்தபுரம், தும்பங்கேணி, திக்கோடை, களுமுந்தன்வெளி, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அல்லும் பகலும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பாடசாலைகளின் சுற்று வேலிகளை துவம்சம் செய்த காட்டுயானைகள் | Wild Elephants Destroyed School Fences In Batti

குறித்த பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டினை அண்மித்த சூழலில் சுமார் 30 இற்கு மேற்பட்ட காட்டுயானைகள் பகலில் தங்கி நிற்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மக்கள் வேண்டுகோள்

இதனையடுத்து, இரவு வேளைகளில் யானைகள் இவ்வாறு தினமும் கிராமங்களுக்குள் உட்புகுந்து வீடுகளையும். பாடசாலைகளும், பயிரினங்களையும் துவம்சம் செய்து வருவதோடு, மக்களையும், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அழித்து வருவதாகவும், அந்தப் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் பாடசாலைகளின் சுற்று வேலிகளை துவம்சம் செய்த காட்டுயானைகள் | Wild Elephants Destroyed School Fences In Batti

யானை வெடிகளை வைத்து யானைகளை விட்டினாலும் அதற்கு இயைபாக்கமடைந்துள்ள காட்டு யானைகளை உடனடியாக தமது பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

திருகோணமலையில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து

அம்பாறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery