விஜயதாச ராஜபக்சவிற்கு கிடைத்துள்ள புதிய நியமனம்
Srilanka Freedom Party
Dr Wijeyadasa Rajapakshe
By Fathima
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ச, இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) மூத்த துணைத் தலைவராக தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நியமனத்திற்கு முன்னர், விஜயதாச ராஜபக்ச, கொழும்பு மாவட்டத்திற்கான SLFP மாவட்டத் தலைவராகவும், மஹரகம தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தமை குறிப்பிடத்க்கது.