ட்ரம்ப்பின் நீண்ட நாள் ஆசை : இடிக்கப்பட்டது வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீண்ட நாள் ஆசையான அமெரிக்கா வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் அடையாளமாகவும் மற்றும் அந்நாட்டு ஜனாதிபதிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லமாகவும் வெள்ளை மாளிகை உள்ளது.
இந்த வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதி கட்டடம் 1902ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
போல்ரூம் அமைப்பது நீண்ட நாள் ஆசை
இந்நிலையில், ட்ரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு போல்ரூம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அத்துடன், இது அவரின் நீண்ட நாள் கனவு மற்றும் நீண்ட நாள் ஆசை எனவும் தெரிவித்திருந்தார்.
அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகவே தற்போது அதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கனவை செயல்படுத்திய முதல் ஜனாதிபதி நான் என பெருமைப்படுகிறேன்
மேலும் 250 மில்லியன் அமெரிக்கா டொலர் செலவில் இந்த போல்ரூம் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட் ட்ரம்ப் " நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதியும், வெள்ளை மாளிகை வளாகத்தில் மிகப் பிரமாண்ட விருதுகள், கலை நிகழ்ச்சிகளுக்காக மக்களை தங்க வைக்க ஒரு போல்ரூம் வேண்டும் என்று 150 வருடங்களுக்கும் மேலாகக் கனவு கண்டு வந்தனர்.
இந்நிலையில், வரி செலுத்துவோருக்கு எந்த சிரமமுமின்றி, இந்த கனவை செயல்படுத்திய முதல் ஜனாதிபதி நான் என பெருமைப்படுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |