வாட்ஸ் அப் பயனாளர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு

WhatsApp
By Fathima Apr 25, 2023 11:14 PM GMT

வாட்ஸ் அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைத்தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டு பயனர்கள் தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது. 

மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் சேவையானது இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு | Whatsapp One Account Multiple Phones

இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இதனை உபயோகப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அவை அனைத்தும் ஒரே வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பும் எவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது,