ஈரான் விவகாரத்தால் இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலக நாடுகள்

By Fathima May 13, 2024 05:33 AM GMT
Fathima

Fathima

ஈரானுக்கு (Iran) சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் (Sri Lanka) வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், குறித்த யோசனைக்கு அமெரிக்கா (America) தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரியவருகின்றது.

மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு

அத்தோடு, 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது 32 விமானங்களுடன் இயங்கும் Mahan-Air ஈரானில் பயங்கரவாதத்திற்கு பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமாக 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவால் பெயரிடப்பட்டது.

ஈரான் விவகாரத்தால் இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலக நாடுகள் | Western Countries Are Very Angry With Srilanka

இதனுடன், ஜெர்மனி (Germany), பிரான்ஸ் (France), சிரியா (Syria), இத்தாலி (Italy), ஸ்பெயின் (Spain) மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் Mahan-Air தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எவ்வாறு இருப்பினும் தற்போது ஈரானுக்கு நட்பாக பத்து நாடுகளில் உள்ள 44 இடங்களுக்கு போக்குவரத்து செய்யும் Mahan-Air நிறுவனம் அண்மையில் இலங்கையில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியமை குறிப்பிடத்தக்கது.