மருதமடு ஆலயப் பகுதியில் கத்தோலிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் டிரோன் திடீர் மரணம் (Photos)

Mannar Sri Lanka Death
By Fathima Aug 14, 2023 10:28 AM GMT
Fathima

Fathima

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27ஆவது வயதில் மடுவில் காலமானார்.

கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில், நேற்று (13.08.2023) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பிற்கான காரணம்

மருதமடு ஆலயப் பகுதியில் கத்தோலிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர் டிரோன் திடீர் மரணம் (Photos) | Web Anchor Of Mannar Catholic Media Passes Away

உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.

தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW