வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை

Matale Nuwara Eliya Trincomalee Weather
By Fathima Jan 23, 2026 12:47 PM GMT
Fathima

Fathima

அடுத்த 36 மணி நேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை | Weather Forecast For Today Sri Lanka

இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.  

மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.